Popular Posts

SLIDESHELF

Saturday, December 24, 2016

64 ஆண்டுகளாக சேர்ந்திருந்த தம்பதிகள்... கரத்தை பிடித்தபடியே இறந்தனர்..!


64 ஆண்டுகளாக சேர்ந்திருந்த தம்பதிகள்... கரத்தை பிடித்தபடியே இறந்தனர்..!
அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரென்ட் வின்ஸ்டீட் (88) மற்றும் டோலோர்ஸ் வின்ஸ்டீட் (83) 64 ஆண்டுகளுக்கு முன்பு மணமுடித்தனர். சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக ட்ரெண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிறகு டோலர்ஸ்சும் உடல்நிலை பாதிப்படைந்ததால் ட்ரென்ட் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார். இருவருக்கும், ஒரே அறையில் சிகிச்சை கொடுத்து வந்துள்ளது மருத்துவமனை நிர்வாகம். 
இதையடுத்து, டிசம்பர் 9-ஆம் தேதி இரவு 9 மணி அளவில் டோலோர்ஸின் உயிர் பிரிந்தது. இதை தொடர்ந்து, அடுத்து சில மணி நேரங்களிலேயே ட்ரெண்ட்டும் இறந்துள்ளார்.
ட்ரென்ட் இறக்கும் போது அவரது வாழ்வில் 64 ஆண்டுகள் கூடவே பயணித்த மனைவி டோலோர்ஸின் கரத்தை பிடித்தபடியே இறந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் மற்றும் 8 பேரக்குழந்தைகளும் உள்ளன.