Popular Posts

SLIDESHELF

Thursday, February 23, 2017

கரும்புள்ளி மறைய இந்த எளிய குறிப்புகளை ட்ரை பண்ணியிருக்கீங்களா?

வெந்தய கீரை :
கரும்புள்ளி மறைய இந்த எளிய குறிப்புகளை ட்ரை பண்ணியிருக்கீங்களா?
கரும்புள்ளியை மறையச் செய்ய இந்த எளிய குறிப்புகளை முயற்சித்துப் பாருங்கள். இவை உடனேயே பலன் தரக் கூடியவை. பக்க விளைவுகளை தராதவை.
கரும்புள்ளி சருமத்தின் அழகை பாழ்படுத்தும். கிருமிகள் , இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் தங்கி கரும்புள்ளிகளாக வெளிப்படும். இந்த கரும்புள்ளிகளை எளிதால அகற்றி விடலாம். சருமத்தை சுத்தப்படுத்துவதே எளிய வழி.
சோப்பை போட்டு தேய்ப்பதால் வறட்சி அதிகமாகுமே தவிர, ஆழமான சென்று இந்த கரும்புள்ளியை அகற்றாது. சருமத்தை சுத்தப்படுத்தி கரும்புள்ளியை அக்ற்ற எளிதான வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை எளிதில் பயன் தரும்.
15 நிமிட உருளை மசாஜ் :
உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.

வெந்தய கீரை :
வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

கொத்துமல்லி மற்றும் மஞ்சள்
கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.

தயிருடன் எலுமிச்சை :
இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.

சர்க்கரை மற்றும் எலுமிச்சை :
எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.


No comments:

Post a Comment